ஏரியில் மீன் பிடித்த கட்டிட மேஸ்திரிக்கு கத்திக்குத்து


ஏரியில் மீன் பிடித்த கட்டிட மேஸ்திரிக்கு கத்திக்குத்து
x

ஏரியில் மீன் பிடித்த கட்டிட மேஸ்திரியை கத்தியால் குத்தியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனுார் கிராமம் புக்கா வட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பாண்டியன் (வயது25). பெங்களூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஜோலார்பேட்டைக்கு வந்த அவர் நேற்று முன்தினம் சின்ன மூக்கனுார் ஏரியில் மீன் பிடித்துள்ளார்.

அப்போது திருப்பத்தூரை அடுத்த காக்கங்கரை நாராயணபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (45) மற்றும் சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்த நாகேஷ், முருகன், அன்பழகன் மனைவி விஜயா ஆகிய நான்கு பேரும் சேர்ந்து பாண்டியன் ஏரியில் மீன் பிடித்தது பார்த்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பாண்டியனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்துார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து பாண்டியன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ஆனந்தன், அவரது சகோதரி விஜயா, உறவினர்கள் நாகேஷ், முருகன் ஆகிய நான்கு பேர் மீது சப்- இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story