ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் சுதந்திரதினவிழா
ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் சுதந்திரதினவிழா
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அவர் பேசுகையில், ஒற்றுமையே பலம், மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நன்கு படித்து வாழ்வில் வளம் பெற வேண்டும் என்றார். விழாவில் கல்லூரியின் பொருளாளர் ஏ.என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் ஏ.என்.செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர், கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி, நிர்வாகவியல் துறை தலைவர் சிவக்குமார் மற்றும் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story