உள்ளூர் விடுமுறை விடப்படுமா?


உள்ளூர் விடுமுறை விடப்படுமா?
x

உள்ளூர் விடுமுறை விடப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரச்சித்தி பெற்ற கோவில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் ஆகும். இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு பெரம்பலூர் மாவட்டமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் நாளை மறுநாள் பங்குனி உத்திரம் என்பதாலும் நிறைய கோவில்களில் திருவிழாக்களும் நடைபெறுகிறது. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நாளை மறுநாள் நடைபெறுவதால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.


Next Story