ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா?


ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா?
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா? கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா? என கூட்டுறவுசங்களின் கூடுதல் பதிவாளர் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா? எனவும் அரிசி, சர்க்கரை கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அளவு சரியாக உள்ளதா எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்பு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் வங்கிக்குகூடுதல் பாதுகாப்பு காவலர் அறை கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டார். இதேபோல் வாய்மேடு, தகட்டூர், ஆயக்காரன்புலம், கடன் சங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின் போது மண்டல இணை பதிவாளார் அருளரசு, கூட்டுறவு சார்பதிவாளர் சண்முகபிரியா வங்கி செயலாளர்கள் அசோகன், வீரமணி உள்பட கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டுறவு சங்க செயலாளர்கள் வாஞ்சிநாதன், மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story