ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கிவெல்டிங் தொழிலாளி சாவு


தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வெல்டிங் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி

ஏரல்:

தூத்துக்குடி மடத்தூர் ரோடு திரவிய ரத்தினபுரம் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் செல்வன் (வயது 45). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு சரோஜா (38)என்ற மனைவியும் பிளசி (12) என்ற மகளும் உள்ளனர். செல்வன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்க காரில் வந்துள்ளார். ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு மேல் பகுதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பொழுது அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவரைமீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்து போனார். அவரது உடலை மீட்டு அவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து அவரது மனைவி சரோஜா கொடுத்த புகாரின் பேரில் ஏரல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி சம்பவ இடத்துக்கு ெசன்று அவரது ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story