பெண்ணிடம் ஜேப்படி செய்த மூதாட்டி கைது


பெண்ணிடம் ஜேப்படி செய்த மூதாட்டி கைது
x
திருப்பூர்


தாராபுரம் புது காவல் நிலைய வீதியை சேர்ந்த சித்ரா என்பவர் இவர் நேற்று மதியம் தாராபுரம் பஸ் நிலையத்தில் உடுமலை செல்ல பஸ்சுக்காக பஸ் நிலையத்தில் காத்து கொண்டிருந்தார்.அப்போது 60 வயது மதிக்கத் தக்க மூதாட்டி ஒருவர் சித்ராவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது சித்ரா கைப்பை வைத்திருந்தார்.அதில் பணம் மற்றும் செல்போன் வைத்திருந்த பையை நைசாக பேசி பிடுங்கி சென்ற போது சித்ரா கூச்சலிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் அந்த மூதாட்டியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் தனுஷ்கோடி சாலையில் வசிக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளி அர்ச்சுணன் மனைவி பஞ்சவர்ணம் (60) என தெரியவந்தது. இவரிடமிருந்து ரூ.500 மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.பிறகு போலீசார் சித்ராவிடம் புகாரை பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து பஞ்சவர்ணத்தை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

---


Next Story