பெண்ணை தாக்கியவர் கைது
பெண்ணை தாக்கியவர் கைதுபெண்ணை தாக்கியவர் கைது
தாராபுரம் அடுத்த வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவர் மகள் மணிமேகலை (வயது 29). காதபுள்ளபட்டியை சேர்ந்தவர் பாலுசாமி. இவர்கள் இருவரும் இனைந்து பேக்கரி வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலுசாமி என்பவர் கடந்த 2 மாத காலமாக கடைக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். இது குறித்து மணிமேகலை பாலுசாமியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை. பாலுசாமிக்கு பதிலாக அவரது மனைவி பூங்கொடி கடைக்கு வந்து இனிமேல் நான் தான் கடையை நடத்த போவதாக மணிமேகலையிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட மணிமேகலை கடையில் வியாபாரம் செய்ய முடியாது. பாலுசாமியை கடைக்கு வர சொல்லுங்கள் என மணிமேகலை கூறினார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மணிக்கு பூங்கொடியின் உறவினரான நல்லிமடம் செங்காட்டூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (42) என்பவர் கடைக்கு வந்து கடையை காலிசெய்துவிட்டு போங்கள் என்று மணிமேகலையை மிரட்டி தகாத வார்த்தையால் பேசி, தாக்கியதாக தாராபுரம் போலீசில் மணிமேகலை புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வன்கொடுமை சட்டதின்கீழ் செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.