1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
காங்கயம்-திருப்பூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காங்கயம் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காங்கயம் சந்தைப்பேட்டை பகுதியில் சந்தேகப்படும்படியான ஒரு நபரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் திருப்பூர் சாலை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire