பா.ஜனதா நிர்வாகியை வெட்டிய வாலிபர் கைது


பா.ஜனதா நிர்வாகியை வெட்டிய வாலிபர் கைது
x
திருப்பூர்


திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 49). இவர் பா.ஜனதா கட்சியின் 49-வது வார்டு தலைவராக உள்ளார். இவருடைய மகன் யோகநாராயணன் (25) நேற்று முன்தினம் இரவு திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே சென்றபோது, திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த இமாம் அலி (28) என்பவர் பணம் பறிக்க முயன்று தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து யோகநாராயணன் தனது தந்தைக்கு செல்போனில் கூறியுள்ளார். கணேசனும் அங்கு வந்து தட்டிக்கேட்டபோது, இமாம் அலி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசனின் கையில் வெட்டியதாக தெரிகிறது. இதில் அவர் காயமடைந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் தெற்கு போலீசார் விரைந்து வந்து கணேசனை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து இமாம் அலியை போலீசார் நேற்று கைது செய்தனர். இமாம் அலி மீது ஏற்கனவே பல குற்றவழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர


Next Story