செல்போன் கடையில் தகராறு; 15 பேர் மீது வழக்கு
செல்போன் கடையில் தகராறு செய்தததாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் வீரபாண்டியார் நகரில் ஏராளமான செல்போன் கடைகள் உள்ளன. நேற்று காலை 7 மணியளவில் ஒரு கடைக்கு செல்போன் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக 3 வாலிபர்கள் வந்தனர். அப்போது கடையில் இருந்த ஊழியர்களுக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். அந்த சமயத்தில் அங்கு வந்த மற்ற கடைக்காரர்கள், சம்பந்தப்பட்ட 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபாகரன், விஜய், சக்ரவர்த்தி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story