மளிகை கடையில் தகராறு; பெண் மீது வழக்கு


மளிகை கடையில் தகராறு; பெண் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 April 2023 1:00 AM IST (Updated: 23 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

இரும்பாலை:-

சேலம் இரும்பாலை அருகே உள்ள கீரைபாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தவமணி. அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில் மனைவி கற்பகம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மளிகை கடையில் பொருட்கள் வாங்கி விட்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் வந்து சேரவில்லை. சம்பவத்தன்று மளிகை கடையில் தவமணி இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கற்பகத்திடம், கடந்த முறை பொருட்கள் வாங்கியதற்கான பணம் வரவில்லை என்று தவமணி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கற்பகம், தவமணியை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கற்பகம் மீது இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story