காங்கிரஸ், பா.ஜ.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு


தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரிடம், பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்

நாகையில், ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரிடம், பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவணப்படம்

குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பி.பி.சி. ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த இந்திய ஒற்றுமை பயணத்தை ேநற்று நிறைவு செய்தார். அதை கொண்டாடும் விதமாக பி.பி.சி. ஆவணப்படத்தை காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமையில் நாகை அபிராமி சன்னதி திடலில் நேற்று இரவு திரையிடப்பட்டது.

வாக்குவாதம்

அப்போது தடை செய்யப்பட்ட ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பா.ஜக.வினர் அபிராமி திடல் சன்னதியில் திரண்டனர்.

பின்னர் அவர்கள், ஆவணப்படம் திரையிடக்கூடாது என காங்கிரஸ் கட்சியினரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காங்கிரஸ், பா.ஜ.க.வினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த சம்பவத்தால் நாகையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story