திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்துவதில் அரசு-தனியார் டிரைவர்கள் இடையே வாக்குவாதம்


திங்கள்சந்தை பஸ் நிலையத்தில்  பஸ்களை நிறுத்துவதில் அரசு-தனியார் டிரைவர்கள் இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்துவது தொடர்பாக அரசு, மினி பஸ் டிரைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் ெசய்தனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்துவது தொடர்பாக அரசு, மினி பஸ் டிரைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் ெசய்தனர்.

பஸ்களை நிறுத்துவதில் தகராறு

திங்கள்சந்தை பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்களுக்கும், மினிபஸ் டிரைவர்களுக்கும் இடையே பஸ்களை நிறுத்துவது தொடர்பாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் மினிபஸ்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாதபடி ஒரு அரசு பஸ்சை நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. இதனால், அரசு மற்றும் மினி பஸ் டிரைவர்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பேரூராட்சி தலைவர் சுமன், வர்த்தக சங்க நிர்வாகிகள் மினிபஸ் உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அபராதம் விதிக்கப்படும்

அப்போது, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்ேபாது, மினிபஸ் டிரைவர்கள் அடிக்கடி அரசு பஸ்கள் செல்ல முடியாதபடி வழிமறித்து நிற்பதாக புகார் கூறினர். அப்போது இன்ஸ்பெக்டர் செந்தில்வேகுமார், 'அவ்வாறு வழிமறிக்கும் வாகனங்களுக்கு இனிமேல் அபராதம் விதிக்கப்படும்' என்று எச்சரித்தார். இதற்கிடையே தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்தின் உள்ளே வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்க பேரூராட்சி தலைவரிடம் பொது மக்கள் கூறினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அரசு மற்றும் மினி பஸ்கள் அதற்கு உரிய இடங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story