பொது இடத்தில் தகராறு: 3 பேர் மீது வழக்கு
பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
கந்தம்பாளையம் அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் மனைவி பழனியம்மாள் (வயது 55). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் (45), அவரது மனைவி ரஷிகா (35) ஆகியோர் பொது இடத்தில் தகராறு மற்றும் அடிதடியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து காயம் அடைந்த 3 பேரும் கரூர் மற்றும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக 3 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story