ஒன்றிய பெண் கவுன்சிலரிடம் வாக்குவாதம்


ஒன்றிய பெண் கவுன்சிலரிடம் வாக்குவாதம்
x

உளுந்தூர்பேட்டை அருகே ஒன்றிய பெண் கவுன்சிலரிடம் வாக்குவாதம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் மனைவி விமலா(வயது 45). தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரான இவருக்கும் நெடுமானவர் ஊராட்சி மன்ற தலைவி ராதாவின் கணவரான வெங்கடேசன் என்பவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை விமலா மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக டிராக்டர் மூலம் அருகில் இருந்த ஏரியில் இருந்து மண் அள்ளி கொண்டு வந்த போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வெங்கடேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஊராட்சி நிர்வாகத்துக்கு தெரியாமல் எப்படி ஏரியில் இருந்து மண் எடுக்கலாம் என கேட்டார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து விமலா கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசன் மற்றம் இவரது ஆதரவாளர்கள் 7 பேர் மீது எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story