அரிக்கொம்பன் யானை குற்றியார் அணை வனப்பகுதியில் உள்ளது


அரிக்கொம்பன் யானை குற்றியார் அணை வனப்பகுதியில் உள்ளது
x

அரிக்கொம்பன் யானை குற்றியார் அணை வனப்பகுதியில் உள்ளது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். அந்த யானையின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், மருத்துவர்கள் அங்கேயே முகாமிட்டு கண்காணித்து வருகிறார்கள். மேலும் அதன் கழுத்தில் கட்டியுள்ள ரேடியோ காலர் கருவியின் சிக்னல் மூலம் அதன் நகர்வை நெல்லை, குமரி மாவட்ட வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த அரிக்கொம்பன் யானை நெல்லை- குமரி மாவட்ட வனவிலங்குகள் சரணாலயத்தை ஒட்டிய பகுதிகளான முத்துக்குழி வயல், மேல் கோதையாறு அணைப்பகுதி ஆகியவற்றை சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்கிறது. யானைக்கு தேவையான உணவும், தண்ணீரும், குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் அங்கு கிடைப்பதால் யானை அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்து வருவதாக வனத்துறையினரால் கூறப்படுகிறது. இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை நடமாட்டம் குறித்து குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரிக்கொம்பன் யானை தற்போது முண்டந்துறை புலிகள் சரணாலயம் குற்றியார் அணை அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. யானையின் கழுத்தில் கட்டியுள்ள ரேடியோ காலர் மூலம் தொடர்ந்து சிக்னல் கிடைக்கப்பெற்று வருகிறது. யானையானது தற்போது நல்ல உடல் நலத்துடன் காணப்படுகிறது. இந்த யானை குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story