அரியலூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தேர்வு
அரியலூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தேர்வு செய்யப்பட்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தேர்தல் நடந்தது. இதில் வி.கைகாட்டியை சேர்ந்த க.ராமநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் 1993-ம் ஆண்டு ம.தி.மு.க. தொடங்கியதில் இருந்து உறுப்பினராக உள்ளார். ஒன்றிய செயலாளராகவும், 10 ஆண்டுகள் ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். இவர் வெற்றி பெற்றதையடுத்து தலைமை கழக அலுவலகமான தாயகத்திற்கு சென்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவிற்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து பெற்றார். மேலும் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, உயர்நிலை குழு உறுப்பினரும், அரியலூர் எம்.எல்.ஏ.வுமான கு.சின்னப்பா, ஆவடி அந்திரி தாஸ் ஆகியோரும் ராமநாதனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story