அரியலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு


அரியலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
x
தினத்தந்தி 3 Jun 2023 12:42 AM IST (Updated: 3 Jun 2023 6:39 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

அரியலூர்

கலந்தாய்வு

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கு இணையதள வழியாக விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் அறிவியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, கல்லூரி முதல்வர் டோமினிக் அமல்ராஜ், துறை தலைவர்கள் மாணவர்களின் கல்வி சான்றிதழ்களை சரி பார்த்தனர்.

மாற்றுச்சான்றிதழ்

இதனைதொடர்ந்து வருகிற 5-ந் தேதி மொழிப்பாடங்களான பி.ஏ. தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 6-ந் தேதி பி.ஏ. வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்றுச்சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கல்லூரிக்கு வர வேண்டும், என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story