அரியலூர் ஒன்றியக்குழு கூட்டம்


அரியலூர் ஒன்றியக்குழு கூட்டம்
x

அரியலூர் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சின்னப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், செலவு கணக்குகள் தொடர்பாக 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story