அரியலூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்


அரியலூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்
x

அரசு, தனியார் சிமெண்டு ஆலைகளில் அரியலூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட மாநாடு ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் தண்டபாணி, ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில் அரியலூர் மாவட்டத்தில் முந்திரி ஆலை, நவீன அரிசி ஆலை, சர்க்கரை ஆலை, காகித உற்பத்தி ஆலை, மலர்செண்டு உற்பத்தி ஆலைகளை தமிழக அரசு தொடங்கி வேலை வாய்ப்பை அளித்திட வேண்டும்.

திருமானூர், தா.பழூர் கொள்ளிடம் மற்றும் மருதையாற்றில் மதகுடன் கூடிய தடுப்பணை அமைத்திட வேண்டும். அரியலூர்- ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம்- சேலம் இணைப்பு மற்றும் திருமானூர் வழியாக அரியலூர்- தஞ்சை இணைப்பு புதிய ரெயில் பாதை அமைக்க வலியுறுத்தியும், பெருகி உள்ள தனியார் மற்றும் அரசு சிமெண்டு ஆலைகளில் அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story