திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி


திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
x

மருதாடு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 26-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் நாடக கலைஞர்கள் அர்ஜுனன் வேடம் அணிந்து கொண்டு உயரமான மரத்தில் ஏறி சிவபெருமானிடம் அம்பு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் காலை முதல் விரதம் இருந்து மரத்தைச் சுற்றி வலம் வந்தனர். திருவிழாவை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story