மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் அர்ஜூனன் எம்.எல்.ஏ.ஆய்வு
மரக்காணம் பேரூராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை அர்ஜூனன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம்
திண்டிவனம் ,
மாண்டஸ் புயலால் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட கைப்பணிகுப்பம் பகுதியில் உள்ள தார் சாலை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைஅர்ஜூனன் எம்.எல்.ஏ.பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி செயலாளர் கனகராஜ், இளைஞரணி செயலாளர் அன்பு மற்றும் மீனவர் அணி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story