ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரையில் ஆயுதப்படை ேபாலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையில் ஆயுதப்படை ேபாலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆயுதப்படை போலீஸ்காரர்
மதுரை செல்லூர் தத்தனேரி கே.வி. சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் மகாலிங்கம் (வயது 31). இவர் தமிழ்நாடு காவல்துறையில் நீலகிரி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு தனது திருமணத்திற்காக விடுமுறை எடுத்து ஊருக்கு வந்திருந்தார். அதன் பின்பு பணிக்குச் செல்லவில்லை.இந்த நிலையில், இவர் தொடர்ந்து வேலைக்கு செல்லாததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி, பிரிந்து சென்றுவிட்டார்.இதனால் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தினமும் குடித்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் மாடியில் உள்ள தனது அறையில் மகாலிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற செல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.