ஆர்ப்பரித்து கொட்டும் ஜலகம்பாைற நீர் வீழ்ச்சி
தொடர் மழை காரணமாக ஜலகம்பாைற நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
திருப்பத்தூர்
தொடர் மழை காரணமாக ஜலகம்பாைற நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக ஜவ்வாதுமலை தொடரில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இங்குள்ள லிங்க வடிவிலான முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுலா தலமாக விளங்குவதால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழும்போது சனி ஞாயிறு கூட்டம் அலைமோதும். தொடர்மழை காரணமாக வனத்துறையினர் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்படும். ஆனால் தற்போது அங்கு எந்த தடையும் இல்லை. இருந்த போதிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு வராதால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story