பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பஞ்சாலை தொழிலாளர்   சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்

அவினாசி

நூல்விலையை குறைக்கக்கோரியும், ஜவுளித்தொழிலை பாதுகாக்க வேண்டியும், தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கக்கோரியும், பஞ்சப்படி, கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், ஜவுளித்தொழிலில் பணிபுரியும் குடும்பங்களுக்கு கல்வி, சுகாதாரம் வீடு வசதிகள் ஏற்படுத்தித்தரவும், இ.எஸ்.ஐ., பி.எப். அடையாள அட்டை, கிராஜுவிட்டி வழங்க வேண்டும், அனைத்து ஜவுளித்தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், தேசிய பஞ்சாலை என்.டி.சி. ஆலைகளை திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு மீண்டும் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவினாசியில் வேலாயுதம்பாளையம், கொடிக்கம்பம் அருகில், மங்கலம் பள்ளி அருகில், துலுக்க முத்தூர் நால்ரோடு, மணியக்கராம்புதூர் உள்ளிட்ட இடங்களில் சி.ஐ.டி.யு. விசைத்தறி தொழிலாளர் சங்கம் மற்றும் பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சி.ஐ.டி.யு. விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் முத்துசாமி, பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பொருளாளர்பழனிச்சாமி, விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் வேலுசாமி, மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், மோகனசுந்தரம், மாவட்ட துணைச்செயலாளர் குமரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story