தலித் விடுதலை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தலித் விடுதலை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நெடுவரம்பாக்கம் பகுதியில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், புதுக்கோட்டை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் தலித் விடுதலை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இணை பொதுச்செயலாளர்கள் சகுந்தலா தங்கராஜ், விடுதலை செல்வன் தலைமை தாங்கினார்கள். நிர்வாகிகள் சண்முகம், செல்வம், ஆறுமுகம், நாகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story