அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சி.ஐ.டி.யூ. சார்பாக உடுமலை கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு துணைத்தலைவர் செவந்தி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மண்டல துணை பொதுச்செயலாளர் விஸ்வநாதன், கிளைத்தலைவர் பாபு, செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் பெரிய மயில்சாமி உள்ளிட்டோர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை தனியார் ஒப்பந்தம் மூலமாக பணி நியமனம் செய்யும் வகையில் அரசாணை வெளியிட்டதை கண்டித்தும், ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் தேவையான ஆட்களை போக்குவரத்து கழகம் நேரடியாக நியமனம் செய்யக் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் புதிதாக வேலையில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வுகால பலன்களை வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.