மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கயம் பஸ் நிலைய வளாகத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் காங்கயம் தாலுகா செயலாளர் கே.திருவேங்கடசாமி தலைமை தாங்கினார். இதில் ஆட்சியாளர்கள் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்களை மேற்கொள்வதற்கான பொது முதலீடுகளை உயர்த்திட வேண்டும். 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுவதுடன், மானிய விலையிலும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடுகளை உயர்த்தி ஊதியத்தையும் உயர்த்திட வேண்டும். செல்வ வரி மற்றும் வாரிசு வரியை அமல்படுத்திட வேண்டும். மருந்துகள் உள்பட உணவு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.