கண்ணில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்


கண்ணில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்ணில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பாக்கியம் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் மாவளப்பன் தொடக்கவுரை ஆற்றினார். அடுத்ததாக மாவட்ட செயலாளர் நாகராஜ் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர்களுக்கு இணையான அகவிலைப்படியுடன் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கக்கோரியும், தற்போது பணிபுரிபவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் பணியிடங்களை ஒதுக்கி தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு ஒப்படைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் சுசிலா நன்றி கூறினார்.


Next Story