இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகராட்சி 54-வது வார்டு பகுதியில் அடிப்படை பிரச்சனை தீர்க்காமல் மெத்தன போக்கை கையாளும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீரபாண்டி பஸ் நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு
54-வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் தார் சாலை, குடிநீர், தெரு விளக்கு, பாதாள சாக்கடை கால்வாய் வசதி மற்றும் குப்பை போன்ற எந்த ஒரு அடிப்படை பிரச்சனைக்கும் தீர்வு காணப்படவில்லை எனவும், பணிகளை விரைவாக மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். போராட்டத்தில் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரவி, (ஏ.ஐ.டி.யு.சி.) மாவட்ட பொதுச் செயலாளர் நடராஜன், மாநில பொதுச் செயலாளர் சேகர், 3வது மண்டல செயலாளர் செந்தில்குமார், 4 மண்டல செயலாளர் வடிவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.