வாகனம் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் வழங்க ஏற்பாடு
அருப்புக்கோட்டையில் ஆற்றுப்படுகைகள் வறண்டதால் வாகனம் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் ஆற்றுப்படுகைகள் வறண்டதால் வாகனம் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
சுழற்சி முறை
அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர், வைகை அணையில் இருந்து கிடைக்க ெபறும் குடிநீரை கொண்டு சுழற்சி முறையில் குடிநீர் வினிேயாகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கடும் வறட்சி காரணமாக 2 ஆற்றுப்படுகையிலும் நீர் வறண்டதால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் வெகுஅளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம்
இந்தநிலையில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒவ்வொரு வார்டாக சென்று குடிநீர் வழங்க 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் வாகனம் ரூ.34 லட்சம் மதிப்பில் அரசிடமிருந்து வாங்கப்பட்டுள்ளதாக நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தெரிவித்துள்ளார்.
கோடைகாலத்தில் ஓரளவுக்கு இதன் மூலம் பொது மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும் எனவும் விரைவில் இந்த குடிநீர் வாகனம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் நகர்மன்ற தலைவர், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.