உத்தரபிரதேசத்துக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்க ஏற்பாடு
உத்தரபிரதேசத்துக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகம், திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள கஸ்தூரிஹால் ஆகிய 3 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 2,240 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உத்தரபிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பெற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அனுப்புவதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பிரதீப் குமார் பார்வையிட்டார்.