முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கியவர் கைது


முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 9 July 2023 1:00 AM IST (Updated: 9 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அரசு (வயது 50). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இந்த நிலையில் அரசுவிடம், கண்ணதாசன் மது குடிப்பதற்கு அடிக்கடி பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 7-ந் தேதி அரசுவை, கண்ணதாசன் தாக்கி மிரட்டினார். இதுகுறித்து அரசு கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்தனர்.


Next Story