பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது


பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2023 1:00 AM IST (Updated: 4 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீசார் நேற்று பாலதோட்டனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முதுகேரிதொட்டி கிராமத்தை சேர்ந்த லக்கப்பா மகன் ரகு (வயது 33) என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பேசி இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார் அவரை எச்சரித்து வீட்டுக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் தொடர்ந்து இடையூறில் ஈடுபட்டதால் போலீசார் ரகுவை கைது செய்தனர்.


Next Story