பெண்ணை தாக்கிய கணவன், மனைவி கைது


பெண்ணை தாக்கிய கணவன், மனைவி கைது
x
தினத்தந்தி 4 Sept 2023 1:00 AM IST (Updated: 4 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்தூர்:

மத்தூர் சாணம்பட்டியை சேர்ந்தவர் மலர் (வயது 39). இவரும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (36), அவருடைய கணவர் பழனி (43) உறவினர்கள் ஆவர். இவர்களின் நிலம் அருகருகே உள்ளது. அவர்களுக்குள் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்சினையில் மலர் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் கோவிந்தம்மாள், பழனி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story