குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 8 பேர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் ஓசூர் சிப்காட், சூளகிரி, கந்திகுப்பம் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.540 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தடை செய்யப்ட்ட குட்கா விற்பனை செய்த வேப்பனப்பள்ளி, பர்கூரை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story