மது விற்ற 2 வாலிபர்கள் கைது


மது விற்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 4 Sept 2023 1:00 AM IST (Updated: 4 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கெலமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் கெலமங்கலம் அண்ணா நகர், ஜீவா நகரில் சோதனை நடத்தினர். அப்போது அண்ணா நகரை சேர்ந்த மஞ்சு (வயது 29), ஜீவா நகரை சேர்ந்த ராகேஷ் (30) என்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 48 கர்நாடக மது பாக்கெட்டுகள், 10 தமிழக மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story