இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சிறுவன் கைது


இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சிறுவன் கைது
x
தினத்தந்தி 10 Sept 2023 1:00 AM IST (Updated: 10 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சிறுவன் கைது செய்யப்பட்டான்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள கடத்தூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் மனைவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் பேரிகை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.


Next Story