குட்கா, லாட்டரி விற்ற 44 பேர் கைது


குட்கா, லாட்டரி விற்ற 44 பேர் கைது
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குட்கா, லாட்டரி விற்றதாக 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குட்கா, லாட்டரி விற்றதாக 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் கிருஷ்ணகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம், பர்கூர், மத்தூர், சூளகிரி, வேப்பனப்பள்ளி, கந்திக்குப்பம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கல்லாவி உள்ளிட்ட பகுதிகளில் மளிகை, பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் குட்கா பதுக்கி விற்ற 42 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

லாட்டரி சீட்டு

அதேபோல கிருஷ்ணகிரி பழையபேட்டையில் லாட்டரி விற்ற ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (வயது 34), காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த அமரேசன் (54) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story