தேன்கனிக்கோட்டையில்பொது மக்களுக்கு இடையூறு செய்த ரவுடி கைது
பொது மக்களுக்கு இடையூறு செய்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் தலைமையில் போலீசார் கொரட்டகிரி பிரிவு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்தார். இதனை பார்த்த அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து செல்ல கூறினர். ஆனால் அந்த நபர் தொடர்ந்து இடையூறு செய்து கொண்டிருந்தார். இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கொரட்டகிரியை சேர்ந்த ரவுடியான கிருஷ்ணப்பா (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கும், கெலமங்கலம் போலீசில் கொலை மிரட்டல் வழக்கும உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story