பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசரிப்பள்ளியை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 25). பஸ் டிரைவர். இவர் சம்பவத்தன்று ஓசூர் மூக்கண்டப்பள்ளி பெட்ரோல் நிலையம் அருகே பஸ்சை நிறுத்தினார். அப்போது அங்கு சிலர் ஆட்டோவை நிறுத்தி மது குடித்து கொண்டிருந்தனர். சரண்ராஜ் அங்கு சென்று ஆட்டோவை எடுக்குமாறு அவர்களிடம் கூறினார். இதற்கு அவர்கள் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் சரண்ராஜ் தாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி சரண்ராஜை தாக்கியதாக ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.எம். நகரை சேர்ந்த பிரபு (29), அரசனட்டி கீழ் தெருவை சேர்ந்த ரவி (48), மாதேஷ் (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் கைதான பிரபு மீது சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ரவி மற்றும் மாதேஷ் மீது வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.