பாதாம்பருப்பு பாக்கெட்டுகள் திருடிய 2 பெண்கள் கைது


பாதாம்பருப்பு பாக்கெட்டுகள் திருடிய 2 பெண்கள் கைது
x

பாதாம்பருப்பு பாக்கெட்டுகள் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் அருகில் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று வந்த 2 பெண்கள் பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான 4 பாதாம் பருப்பு பாக்கெட்டுகளை எடுத்து இரண்டு பாக்கெட்டுகள் வீதம் உள்பாவாடைக்குள் வைத்துக் கொண்டு செல்ல முயன்றனர். இதனை கண்டு சந்தேகப்பட்டு பார்த்த கடை ஊழியர்கள் பெண்களை வைத்து சோதனை யிட்டபோது 4 பாதாம் பருப்பு பாக்கெட்டுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை செக்கானூரணி பகுதியை சேர்ந்த மொக்க மாயன் என்பவரின் மனைவி சுசீலா (வயது45) மற்றும் வடகாட்டுப்பட்டியை சேர்ந்த பேயாண்டி மனைவி ராக்கம்மாள் (60) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பாதாம் பருப்பு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story