டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது
டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
மானாமதுரை,
திருப்புவனம் அருகே கல்யாந்தூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த 7-ந் தேதி மர்ம கும்பல் டாஸ்மாக் காவலாளியை தாக்கி ரூ. 5 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது. இதையடுத்து மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின்பேரில் திருப்புவனம் சப்-இன்ஸ் பெக்டர்கள் ராம சுப்பிரமணி, திருமுருகன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், பக்ருதீன் ஆகியோர் மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் பாலமுருகன் ஆகியோரை பிடித்து கைது செய்தனர். ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story