விபத்தில் தம்பதி பலியான வழக்கில் டிரைவர் கைது


விபத்தில் தம்பதி பலியான வழக்கில் டிரைவர் கைது
x

விபத்தில் தம்பதி பலியான வழக்கில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே உள்ள பாசானி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. கூலித்தொழிலாளி. இவர் மனைவி சிநேகவல்லியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் மீது மோதியது தனியார் பஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனியார் பஸ் டிரைவரான காரைக்குடி புதுவயலை சேர்ந்த ஷேக் இபுராகிம் (வயது 29) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story