2-வது முறையாக குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


2-வது முறையாக குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

சேலத்தில் 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 22). இவர் கடந்த மாதம் தனது சகோதரி மீனாவுடன் சேர்ந்து, குகை பகுதியில் நடந்து சென்ற மணிமாறன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றார். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து, மீனா ஆகியோரை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் முத்து மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் பதிவாகி இருந்ததும், கடந்த 2018-ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்த நிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து 2-வது முறையாக முத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா உத்தரவிட்டார்.


Next Story