வாலிபரை கடத்தி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது


வாலிபரை கடத்தி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
x

மதுரையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை கடத்தி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை கடத்தி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தல்

மதுரை யாகப்பா நகர், செல்வவிநாயகர் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 78). இவரது பேரன் மணிமாறன், அங்குள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் வேல்முருகனுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் சம்பவத்தன்று நள்ளிரவு 2 பேருடன் மணிமாறன் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரிடம் தனியாக பேச வேண்டும் என்று அவரை வெளியே வரவழைத்து கடத்தி சென்றுவிட்டார். மேலும் அவரை மறைவான பகுதிக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் மணிமாறன் பாட்டியை தொடர்பு கொண்டு கள்ளத்தொடர்பு விஷயத்தை தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தி வைக்கப்பட்டுள்ள அவரை விடுவிக்க ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டினர்.

3 பேர் கைது

உடனே பாட்டி லட்சுமி அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம், தாமரை ஊருணி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (45), ஆனையூர் மந்தை திடல் இருளாண்டி என்ற கார்த்திக் (28), தீக்கதிர் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி (45) என்பது தெரியவந்தது.

பின்னர் அந்த பகுதியில் மறைந்திருந்த அவர்கள் 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

மேலும் மணிமாறனை மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்தனர். தொழிலாளியை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story