ஐம்பொன் சாமி சிலைகளை விற்க முயன்ற 2 பேர் கைது


ஐம்பொன் சாமி சிலைகளை விற்க முயன்ற 2 பேர் கைது
x

ஐம்பொன் சாமி சிலைகளை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள பழமையான 2 ஐம்பொன் சிலைகளை விற்க முயற்சி செய்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இது குறித்து சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி.ஜெயந்த்முரளி, ஐ.ஜி.தினகரன் ஆகியோர் உத்தரவின் பேரில் மதுரை சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் பிரேமாசாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், முருகபூபதி, பாண்டியராஜன், செல்வராஜ், சந்தனக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த சிலையை வாங்குவதுபோல் சென்று விலை பேசி கடலூர் மாவட்டம் விருத்தாசலம், இருப்புகுறிச்சியை சேர்ந்த மகிமைதாஸ் என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை மற்றும் பெருமாள் ஐம்பொன்சிலைகளை கைப்பற்றினர். மேலும் அவரிடம் விசாரித்த போது விருத்தாசலம் பெரியகோட்டிமுளையை சேர்ந்த பச்சமுத்து இந்த சிலைகளை கொடுத்து விற்க கூறினார். மேலும் அதன் மதிப்பு ரூ.2 கோடி என்று கூறியதாக போலீசாரிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் பச்சமுத்துவை ஈரோட்டில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அந்த சிலைகளை அரியலூரை சேர்ந்த முருகானந்தம் கொடுத்ததாகவும், பழமையான கோவிலில் இருந்து திடுப்பட்டதாக கூறினார். அதைத்தொடர்ந்து மதுரை சரக போலீசார் 2 பேரையும் கைது செய்து, அந்த சிலைகளை கைப்பற்றினர். மேலும் அந்த சிலைகள் எந்த கோவிலில் திருடப்பட்டது, அதன் தன்மை குறித்து விசாரித்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story