லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் கேரள மாநில லாட்டரிகள் அதிகளவில் விற்று வந்த நிலையில் லாட்டரி வியாபாரிகள் மீது துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் கடுமையான நடவடிக்கை எடுத்து லாட்டரி விற்பனையை முற்றிலுமாக ஒழித்தார். இந்த நிலையில் மீண்டும் சிவகாசி பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக திருத்தங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சிறப்பு குழுவை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்ததாக நாகராஜன் (வயது 60), ராஜேந்திரன் (75) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.13,680-ஐ பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story