சேலத்தில் கந்து வட்டி வழக்குகளில் 10 பேர் கைது


சேலத்தில் கந்து வட்டி வழக்குகளில் 10 பேர் கைது
x

சேலத்தில் கந்து வட்டி வழக்குகளில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலத்தில் கந்து வட்டி புகார்கள் குறித்த மனுக்கள் மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி வட்டிக்கு பணம் கொடுத்து, கந்து வட்டி வசூலிப்பதாக இதுவரை மாநகர் பகுதியில் மொத்தம் 19 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 9 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story