சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது-18 பவுன் நகை பறிமுதல்


சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது-18 பவுன் நகை பறிமுதல்
x

சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

வழிப்பறி

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி குரால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 27). இவர், பள்ளப்பட்டியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு அப்பகுதியில் நடந்து சென்றபோது, அவரை 2 பேர் வழிமறித்து அவரிடம் இருந்து ரூ.3,100 மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறிதது விசாரணை நடத்தினர்.

18 பவுன் பறிமுதல்

அதில், பொன்னம்மாபேட்டையை சேர்ந்த லோகேஸ்வரன் (22), குமாரபாளையத்தை சேர்ந்த வேல் என்ற சக்திவேல் என்பதும், இவர்கள் இருவரும் சம்பவத்தன்று ஜீவானந்தத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் மேலும் 3 பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. இதைதொடர்ந்து அவர்களிடம் இருந்து 18 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேசமயம், கைது செய்யப்பட்ட 2 பேரும், வேறு யாராவது நபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story